விருதுநகர் பழையபஸ்நிலையம் அருகே உள்ள விக்னேஷ் காலனியில் 2 குரங்குகள் குடியிருப்போருக்கு தொல்லை கொடுத்து வரும் நிலை உள்ளது. வீடுகளில் உள்ள குழந்தைகள் குரங்குகளை கண்டு அச்சப்பட்டு அலறும் நிலை தொடர்கிறது. எனவே விருதுநகர் நகராட்சி நிர்வாகம் வனத்துறையினரின் உதவியுடன் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.