தமிழக செய்திகள்

சென்னையில் வீடு புகுந்து நகை திருட்டு: தாய்-மகள் கைது

தாய்-மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பியூலா. இந்த வீட்டின் கீழ்தளத்தில் ரேவதி(வயது 38) என்ற பெண் தனது கணவர் மற்றும் 15 வயது மகளுடன் வசித்து வருகிறார். பியூலா வீட்டின் பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருடு போனது. இதுபற்றி அம்பத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் கீழ் வீட்டில் வசிக்கும் ரேவதி, தனது மகள் மூலம் பியூலா வீடு புகுந்து நகையை திருடியது தெரியவந்தது.

தாய்-மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடியதாக குன்றத்தூரைச் சேர்ந்த விவின் கேபா(20) என்பவரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து