தமிழக செய்திகள்

பராமரிப்பின்றி பூங்கா

தஞ்சை தொம்பன்குடிசையில் சாலை நடுவே பராமரிப்பின்றி கிடக்கும் சிறிய அளவிலான பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தினத்தந்தி

தஞ்சை தொம்பன்குடிசையில் சாலை நடுவே பராமரிப்பின்றி கிடக்கும் சிறிய அளவிலான பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சிறிய அளவிலான பூங்கா

தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் சாலையின் நடுவே சிறிய அளவிலான பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவிற்குள் புற்தரைகள், மரங்கள் நடப்பட்டிருந்தன. பூங்காவிற்குள் பிரமாண்ட தலையாட்டி பொம்மையும் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பூங்காவை சுற்றிலும் சிறிய சுவர் எழுப்பப்பட்டு இரும்புக்கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது பூங்கா முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதன்காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தடுப்புகம்பிகள் சாய்ந்து சாலையில் கிடந்தன.

சீரமைக்க வேண்டும்

மேலும், பூங்காவுக்குள் செடி, கொடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன. தடுப்புக்கம்பிகள் இல்லாததால் மது அருந்துபவர்கள் சாலை நடுவே உள்ள பூங்காவை மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையின் நடுவே உள்ள சிறிய அளவிலான பூங்காவை சுற்றி தடுப்புக்கம்பிகள் அமைக்கவும், பூங்காவை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்