தமிழக செய்திகள்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்த மக்கள், விடுமுறை முடிந்ததால் தற்போது சென்னை திரும்பி வருகின்றனர்.

தினத்தந்தி

தாம்பரம்.

கடந்த வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் தொடர் விடுமுறை முடிந்து தங்கள் சொந்த ஊர்களிலிருந்து இன்று சென்னை திரும்பி வருகின்றனர்.

இதன் காரணமாக பெருங்களத்தூர்-தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கார்கள், சிறப்பு பேருந்துகள், அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதேபோல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்