பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் கம்பன் நகரில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வைத்திலிங்கம் என்பவரின் மனைவி ராமாயி(47), கலியபெருமாள் என்பவரின் மனைவி கற்பகம்(54) உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.