திருச்சி,
திருச்சியில் துவரங்குறிச்சி அருகே கல்லுப்பட்டி பகுதியில் போலீஸ் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், வேனின் டயர் திடீரென வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த போலீசார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 7 பேர் லேசான காயம் அடைந்து உள்ளனர்.