தமிழக செய்திகள்

பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் செய்தனர்.

தினத்தந்தி

பொன்னேரி, 

பொன்னேரி பஜார் பகுதியில் அரிசி, காய்கறி, இறைச்சி, ஹோட்டல்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னேரியில் ரவுடிகள் கும்பல் கடைகளுக்குள் புகுந்து மாமூல் கேட்பதும், வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கேட்டால் கடைகாரர்களை மிரட்டி கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்குவது போன்ற வன்முறை செயல்கள் அவ்வப்போது நடைபெறுகிறது.

இந்த நிலையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ரவுடிகள் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி பொன்னேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு நேற்று ஒருநாள் முழுவதும் கடைகளை மூடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பொன்னேரியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்