தமிழக செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்று பேசினார். சின்னப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 64 மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 79 லட்சம் மதிப்பிலான மொத்தம் 5,778 விலையில்லா சைக்கிள்களை வழங்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு விரைவாக வந்து, பாடங்களை கவனத்துடன் படித்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைய வேண்டும், என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து