தமிழக செய்திகள்

ஜெயலலிதா ஓய்வெடுக்க செல்லும் நீலகிரியில் உள்ள கோடநாடு பங்களாவிலும் சோதனை

ஜெயலலிதா ஓய்வெடுக்க செல்லும் நீலகிரியில் உள்ள கோடநாடு பங்களாவிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

தினத்தந்தி

இதேபோன்று சசிகலாவின் உறவினர் திவாகரன், விவேக் ஆகிய வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

திருவாரூரில் மன்னார்குடியின் சுந்தரகோட்டையிலுள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. திருவாரூர் கீழதிருப்பாலக்குடியில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

மன்னார்குடியில் திவாகரன் உதவியாளரான முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. திவாகரன் ஆதரவாளர்கள் வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

மன்னார்குடியில் தினகரன் அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை