தமிழக செய்திகள்

பாதுகாப்பான நகரம் குறித்த பேரணி: பெண்களுடன் சைக்கிள் ஓட்டிய மேயர் பிரியா

பாதுகாப்பான நகரம் குறித்த பேரணியில் சக பெண்களுடன் சேர்ந்து மேயர் பிரியா சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

தினத்தந்தி

பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும், 'சிங்கார சென்னை 2.0' வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி நேற்று பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி நடைபெற்றது.

சென்னை இந்திரா நகர் பறக்கும் ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகில் நடைபெற்ற பேரணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு, சக பெண்களுடன் சேர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்