தமிழக செய்திகள்

ரமலான் பண்டிகை: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையையொட்டி, நடிகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விஜய் தெரிவித்து இருப்பதாவது; 

"புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் விஜய் தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை