தமிழக செய்திகள்

மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி பொக்லைன் டிரைவருக்கு வலைவீச்சு

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற பொக்லைன் டிரைவருக்கு வலைவீசி தேடி வருகின்றனா.

தினத்தந்தி

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி விழுப்புரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புருஷானூரை சேர்ந்த செல்வம் மகனான பொக்லைன் எந்திர டிரைவர் ராஜ்குமார் (30) என்பவர் மதுபோதையில், அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. உடனே மாணவி கூச்சலிட்டபடி அங்கிருந்து வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து அவர், தனது பெற்றோரிடம் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை