தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணாவு நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணாவு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் சாந்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி முதல்வர் ரஜப் பாத்திமா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், விபத்துகள் எவ்வாறு நடக்கிறது, அதில் ஓட்டுனர்கள் செய்யும் தவறு என்ன என்பது குறித்து எடுத்து கூறினார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

பயிற்சி பள்ளி உரிமையாளர் டொமினிக் ஆண்டனி சாலை பாதுகாப்பு பற்றியும் அதனை கையாளுவது பற்றியும் விளக்கி பேசினார். முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமலட்சுமி நன்றி கூறினார். முன்னதாக சாலைபாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்