வாணாபுரம்
வெறையூர் அருகே உள்ள அண்டம்பள்ளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகள் வினோஷா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை அவரது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
அப்போது திடீரென விவசாய நிலத்தில் இருந்த வினோஷா மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வெறையூர் போலீசார் விரைந்து வந்து வினோஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.