தமிழக செய்திகள்

குமரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

சென்னை அருகே நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக, குமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன.மேலும், தோவாளை பகுதியில் ஓடும் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்