கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

டிட்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் (1-ந்தேதி) முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாநகர காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை, திருவள்ளூரில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு சென்னை, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (04.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து