கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20.53 லட்சம் பேர் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், குரூப் -4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும்.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நேற்றுவரை 20.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து