தமிழக செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை,

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியே பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

கர்நாடகா முதல் தென் தமிழகம் வரை உள்ள வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் 28-ந்தேதி வரை (5 நாட்களுக்கு) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

24, 25 மற்றும் 26-ந்தேதிகளில் ஆங்காங்கே ஓரிரு இடங்களிலும், 27, 28-ந்தேதி சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். 27, 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, காற்றுடன் கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது. மழை பெய்யாத பகுதிகளில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு