தமிழக செய்திகள்

சிறப்பு கிராம சபை கூட்டம்

நரிமணம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தினத்தந்தி

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கூட்டத்தில் பேசினார். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீனம், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல எரவாஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி தேவி பாலதண்டாயுதம் தலைமையிலும், அகரகொந்தகையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையிலும், கொட்டாரக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி தலைமையிலும், ஏனங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையிலும், வடகரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையிலும், பில்லாளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ் தலைமையிலும், ராராந்திமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி தலைமையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை