தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் வழியாக காசியில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்; மத்திய மந்திரியிடம், சங்கராச்சாரியார் வேண்டுகோள்

காஞ்சீபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வரும் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மந்திரி எல்.முருகன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது, மத்திய அரசில் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் எல்.முருகனுக்கு பல்வேறு துறைகளின் மூலமாக மக்களுக்கு சேவை செய்யவும் அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் நல்லமுறையில் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும். உத்தரபிரதேச மாநிலம் காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு காஞ்சீபுரம் வழியாக சிறப்பு ரெயில் இயக்க அனுமதி பெற்று தர வேண்டும் எனவும் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக ஓரிக்கை மணி மண்டப நுழைவு வாயிலில் அவருக்கு காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் என்.சுந்தரேச அய்யர் மாலை அணிவித்து வரவேற்றார். அமைச்சருடன் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாபு, மாநில அமைப்பு சாரா தொழிலாளர் துணைச்செயலாளர் கணேஷ், சுபாஷ், நகர நிர்வாகிகள் ஜீவானந்தம், அதிசயம் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு