தமிழக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் ஒருவரை சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். #SriLankablasts

சென்னை,

இலங்கையில் கடந்த 21ந்தேதி காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 250 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் ஒருவர் பதுங்கி உள்ளார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு