தமிழக செய்திகள்

பாவூர்சத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு...!

பாவூர்சத்திரத்தில் மயங்கி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

தினத்தந்தி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வடமலைபட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது57). இவர் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியில் வசித்து வந்தார். விக்ரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர், தற்போது மணிமுத்தாறு காவலர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக இருந்துவந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நேற்று இரவு மணிமுத்தாறில் பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு பைக்கில் வந்துள்ளார்.

இவர் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் அருகே வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உள்ளார். அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து