தமிழக செய்திகள்

தமிழகத்தில் நெல்லுக்கான ஆதார விலை ரூ.2,500 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

விவசாயிகளிடமிருந்து நேரடியாக விவசாயப் பொருள்களை மாநில அரசு கொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கும் விலையாகும்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஆதரவு விலை சாதாரண ரக நெல்லாக இருந்தால், குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ம், சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2545 ஆகவும் வழங்கப்படும்..இந்த நடைமுறையானது, வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 2026 ஆக 31 வரை அமலில் இருக்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விவசாயிகளிடமிருந்து நேரடியாக விவசாயப் பொருள்களை மாநில அரசு கொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கும் விலையாகும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திய தமிழக அரசின் முடிவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து