தமிழக செய்திகள்

சாக்பீசில் சுதந்திர தின சிற்பம் உருவாக்கி வாலிபர் அசத்தல்

போடியல் சாக்பீசில் சுதந்திர தின சிற்பம் உருவாக்கி வாலிபர் அசத்தினார்.

தினத்தந்தி

போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், பல்வேறு வகையான பொருட்களில் சிற்பங்கள் செதுக்கி வருகிறார். சாக்பீசிலும் யானை உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள், மனிதர்களின் உருவங்களை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு சாக்பீசில் சுதந்திர தின சிற்பம் உருவாக்கி அசத்தினார். அந்த சிற்பம் ஒரு செ.மீ. அகலம், 3.5 செ.மீ. உயரத்தில் இளைஞர் ஒருவர் தேசிய கொடியை இரண்டு கைகளில் ஏந்தி நிற்பது போன்று இருந்தது. இந்த சிற்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிற்பத்தை உருவாக்க மணி நேரம் ஆனது என்று பிரேம்குமார் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை