தமிழக செய்திகள்

கடன் வாங்கிய பணத்தை கேட்டு அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

கடன் வாங்கிய பணத்தை கேட்டு அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தா.பழூர் 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன்கள் கவியரசன்(வயது 29), கவிபாலன்(27). இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கவியரசன் தனது தம்பி கவிபாலனிடம் ரூ.90 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். சம்பவத்தன்று கவிபாலன் தனது அண்ணனிடம் கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டுள்ளார். அதற்கு கவியரசன் 6 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிபாலன் தனது அண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த செங்கல்லால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கவியரசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை