தமிழக செய்திகள்

மாமல்லபுரம் வந்த ராணுவ துணை தளபதி புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார்

மாமல்லபுரம் வந்த ராணுவ துணை தளபதி புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார்.

தினத்தந்தி

சென்னை,

டெல்லியில் இருந்து இந்திய ராணுவ துணை தளபதி சி.பி.மொகந்தி நேற்று மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் அங்கு யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய புராதன சின்னங்களான பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களையும், குடைவரை கோவில்களையும் சுற்றி பார்த்து ரசித்தார். அவருக்கு மாமல்லபுரம் புராதன சிற்பங்கள் பற்றியும், அவற்றை உருவாக்கிய பல்லவ மன்னர்களின் வரலாற்று கதைகளையும் சுற்றுலா வழிகாட்டிகளும், தொல்லியல் துறை அதிகாரிகளும் விளக்கி கூறினர்.

ஒவ்வொரு சிற்பங்களின் நுணுக்கங்கள் பற்றி அவர் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார். முன்னதாக இந்திய ராணுவ துணை தளபதியை ஐந்துரதம் பகுதி அருகில் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து