தமிழக செய்திகள்

ஸ்கூட்டர் மீது லாரி மோதி சிறுமி சாவு

ஓசூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

ஓசூர்

ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். டிரைவர். இவரது மகள்கள் ஹேமவர்ஷினி (வயது9), தர்ஷிதா (5). இதில் மூத்த மகள், புத்தசாகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பும், இளைய மகள் யு.கே.ஜி.யும் படித்து வந்தனர். நேற்று மாலை சுரேஷ் தனது மகள்களுடன் ஸ்கூட்டரில் புக்கசாகரத்தில் இருந்து ஊருக்கு சென்றார். கதிரேபள்ளி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சிறுமி ஹேமவர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ், தர்ஷிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை