தமிழக செய்திகள்

நாகர்கோவில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

நாகர்கோவிலில் கீழே இறங்கிய போது ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கீழே இறங்கிய போது ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

பரிதாப சாவு

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து ஆசாரிப்பள்ளம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ் ஆசாரிபள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர் ஓடும் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு