தமிழக செய்திகள்

விழுப்புரம் அருகேகோவில் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

வளவனூர், 

விழுப்புரம் அருகே செங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு அதன் பூசாரி மண்ணாங்கட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக அவர், கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்கச்சங்கிலி மற்றும் கோவிலின் பின்புற பகுதியில் கோவில் செலவுக்காக வைத்திருந்த உண்டியல் காணிக்கை பணம் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து