தமிழக செய்திகள்

தலையில் பாத்திரத்தை கவிழ்த்தபடி வந்து மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு

தலையில் பாத்திரத்தை கவிழ்த்தபடி வந்து மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு: பலே திருடனுக்கு வலைவீச்சு.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 65). இவர் செஞ்சி காந்தி கடை வீதியில் ஒருக்கட்டிடத்தில் மளிகை கடையும், அதன் மேல் தளத்தில் சூப்பர் மார்க்கெட்டும் நடத்தி வருகிறார். நேற்று கடைக்கு வந்தபோது, அங்குள்ள கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு மொட்டை மாடியின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதன் மூலம் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மளிகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் பார்த்தார். அப்போது, கடையின் மேல் மாடி வழியாக ஒரு நபர், தலையில் பெரிய பாத்திரத்தை கவிழ்த்தபடி மளிகை கடைக்குள் வந்து, பணத்தை திருடி சென்று இருப்பது பதிவாகி இருந்தது. அந்த பலே ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது