தமிழக செய்திகள்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.'மிக்ஜம்' புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மழைநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பால் சிரமப்பட்டனர். இதனையடுத்து, இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று வரை விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.மழை வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (அதாவது இன்று) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை