தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - உதவி காவல் ஆய்வாளர் பலி

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

வாலாஜாபாத்,

காஞ்சிபுரம் வேலிங்கபட்டரை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 59). சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பணிக்காக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னையன் சத்திரம் பகுதியில் சென்ற பொழுது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் முருகன் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த பெருமாள் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை