தமிழக செய்திகள்

டேன்டீ குடியிருப்பில் சுகாதார சீர்கேடு

கொளப்பள்ளி டேன்டீ குடியிருப்பில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பந்தலூர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.1 பத்துலைன்ஸ் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அங்கு குடியிருப்புகளை ஒட்டி சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் குடியிருப்பு முன்பு ஓடுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் ஓடுவதோடு, தேங்கி நிற்கிறது. இந்த நிலையை போக்க கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்