தமிழக செய்திகள்

உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 14 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை

ஆயுத பூஜையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 14 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை ஆகின.

தினத்தந்தி

ஆயுத பூஜையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 14 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை ஆகின.

ஆயுதபூஜை

ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை தினத்தன்று உழவர் சந்தைகளில் காய்கறிகள் அதிகம் விற்பனை ஆகும். இந்தாண்டு ஆயுதபூஜையை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி வழக்கத்தை விட காய்கள் அதிகம் விற்பனை ஆகின.

சூரமங்கலம் உழவர் சந்தையில் அன்று ஒரு நாள் மட்டும் காய்கள், பழங்கள், பூக்கள் என மொத்தம் 62 ஆயிரத்து 110 கிலோ, ரூ.24 லட்சத்து 26 ஆயிரத்து 740-க்கு விற்பனை ஆகின. தாதகாப்பட்டியில் ரூ.21 லட்சத்து ஆயிரத்து 984-க்கு விற்றன.

11 உழவர் சந்தை

அதேபோன்று அஸ்தம்பட்டியில் ரூ.9 லட்சத்து 11 ஆயிரத்து 944-க்கு விற்பனை ஆகின. அம்மாபேட்டையில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 361-க்கும், ஆத்தூரில் ரூ.20 லட்சத்து 39 ஆயிரத்து 630-க்கும், இளம்பிள்ளையில் ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 755, எடப்பாடியில் ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 770-க்கும் விற்கப்பட்டன.

மேட்டூரில் ரூ.10 லட்சத்து 2 ஆயிரத்து 350-க்கும், ஆட்டையாம்பட்டியில் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 30, தம்மம்பட்டியில் ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 250-க்கும் என மொத்தம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் ஆயுத பூஜை தினத்தன்று ஒரு நாள் மட்டும் ரூ.1 கோடியே 14 லட்சத்து 88 ஆயிரத்து 519-க்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆகின.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை