தமிழக செய்திகள்

முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

தேனி,

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும். இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட முடியாத சூழல் நிலவியது.

இந்த நிலையில் இந்த ஆண்டு, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக, நீர் இருப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு