சென்னை,
தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், நீர் மேலாண்மை குறித்த துரைமுருகன் கருத்து வேடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சியில்தான் காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழக உரிமைகள் தாரைவார்க்கப்பட்டது. திமுக மத்திய அரசில் 2 முறை அங்கம் வகித்த போது நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை துறைகளை கேட்டுப் பெற்றதா?, அவர்கள் தங்களுக்கு எது தேவையோ அவற்றை மட்டுமே கேட்டுப் பெற்றுக்கொண்டனர். நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்க்கின்றது. மேலும் காவிரியின் குறுக்கே 5 அணைகள் கட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.