தமிழக செய்திகள்

சிவகாசியில் மகளிர் தின கொண்டாட்டம்

சிவகாசியில் மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர்தினவிழாவில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும் பெண் கவுன்சிலர்கள், பெண் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சிவகாசி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர்தின விழாவில் யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் தலைமை தாங்கி கேக் வெட்டி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வழங்கினார். ஆனையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மகளிர்தினத்தையொட்டி மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் சாட்சியாபுரம் சி.எம்.எஸ். பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு யூனியன் தலைவர் முத்துலட்சுமிவிவேகன்ராஜ் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆனையூர் பஞ்சாயத்து செயலர் நாகராஜன், யூனியன் அதிகாரி தர்மர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனையூர் இந்திராநகரில் உள்ள சமுதாய கூடத்தில் அப்பகுதி உள்ள மகளிர்சுயஉதவிக்குழுக்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பஞ்சயாத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா பிரவின் ஆகியோர் பரிசு வழங்கினர். இதேபோல் திருத்தங்கலில் மாநகர தி.மு.க. சார்பில் மகளிர்தினவிழா கொண்டாடப்பட்டது. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும் கவுன்சிலர்கள், தி.மு.க. மகளிர் அணியினர் கலந்து கொண் டனர். இதில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு