தமிழக செய்திகள்

ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது

ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

தினத்தந்தி

காரைக்குடி,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 55). இவர் கல்லல் அருகே உள்ள சொக்கநாதபுரத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்க்காக வந்திருந்தார். திருவிழா முடிந்தது மீண்டும் ஆலங்காடு செல்ல கல்லல் ரயில் நிலையம் வந்தார். அங்கு மானாமதுரை-திருச்சி செல்லும் ரயிலில் ஏற முற்பட்டபோது வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் மதிப்புடைய 2 தங்கச்சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுதமா தீபா, சேவுகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கல்லல் அருகே உள்ள வைரவாபட்டியை ராம்குமார்(வயது 23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 பவுன் தங்கச்சங்கிலியை மீட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை