தலைப்புச் செய்திகள்

மத்திய பட்ஜெட் 2026: தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..?

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2026 - 27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

இதில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..?

* சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் இடையே அதிவேக ரெயி வழித்தடம் அமைக்கப்படும்.

* கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்.

* தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

* பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்

* பொதிகை மலையில் டிரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்

* இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்

* சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.

* அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய வழித்தட திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளாவுக்கு அறிமுகம்.

Budget 2026 Live Updates... மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் வருமான வரி விதிப்பு முறை எப்போது அமலுக்கு வந்தது தெரியுமா?

‘தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை’ - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி நிதி: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?

“வெற்றி மேல் வெற்றி சேர..” - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து