கோப்புப்படம் 
உலக செய்திகள்

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவானதாக யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 27.01 கி.மீ ஆழத்துடன் கூடிய மையப்பகுதி உருவானதாகவும், 30.3301 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 177.4501 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT