உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு; பெண் உள்பட 9 பேர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் என தகவல்

இலங்கையில் பெண் உள்பட 9 பேர் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. #EasterSundaybombings, #SriLankapolice

கொழும்பு,

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில் ஒரு பெண் உள்பட 9 தற்கொலை படையினர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு