உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

சீனாவில் யுனான் மாகாணத்தில் நடந்த சுரங்க வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில், சுலு மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும், அபு சயாப் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நடந்த இரு வெவ்வேறு மோதல்களில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

* ஏமன் நாட்டில் ஹாத்ராமவுட் மாகாணத்தில் சாலையோர குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினரின் வாகனம் சிக்கி வெடித்தது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

* சீனாவில் யுனான் மாகாணத்தில் நடந்த சுரங்க வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

* அமெரிக்காவில் வட டகோட்டா மாகாணத்தின் மாண்டன் நகரில் வர்த்தக நிறுவனம் ஒன்றில் 3 ஆண்கள், ஒரு பெண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

* பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் இம்ரான்கான் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் தேர்தல் கமிஷனுக்கு 2 உறுப்பினர்களை நியமிக்க வேண்டி இருப்பதால், இது தொடர்பாக பரிந்துரை செய்ய விரும்பும் நபர்களின் பெயர் பட்டியலை எழுத்துப்பூர்வமாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

* அர்ஜென்டினா நாட்டில் அக்டோபர் மாதம் 27-ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய அதிபர் மொரிசியோ மேக்ரி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு