உலக செய்திகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 18 பேர் காயம்

சீனாவின் ஷாங்காய் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 18 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஷாங்காய்,

சீனாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி, பாதசாரிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வாகனங்களை மக்கள் கூட்டத்திற்குள் செலுத்தி தாக்குதல் நடத்தும் முறையை பயங்கரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து