உலக செய்திகள்

சீன ராணுவ மந்திரி இலங்கையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்.

தினத்தந்தி

கொழும்பு,

சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார். விமானம் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்ற அவரை இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றார். அதனை தொடர்ந்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாதுகாப்பு ரீதியில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கேவுடனான சந்திப்பு பலனளிக்கும் பேச்சுவார்த்தையாக அமைந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்தார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்