உலக செய்திகள்

இந்தோனேசியாவில் கடும் வெள்ளம்; பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவின் தெற்கே 10 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நில சரிவு ஏற்பட்டது.

இதனால் வீடுகள், அரசு கட்டிடங்கள், பள்ளி கூடங்கள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதில் 2 குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாகி உள்ளனர். 24 பேரை காணவில்லை.

இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 3,321 குடும்பத்தினர் பாதிப்படைந்து உள்ளனர். 46 பேர் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை