உலக செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை குழுக்களை ராஜபக்சே சகோதரர்கள் தான் உருவாக்கினார்கள் : முன்னாள் அமைச்சர் கருத்து

"ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை குழுக்களை" ராஜபக்சே சகோதரர்கள் தான் உருவாக்கினார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கருத்து தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் அன்று தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத்தை போன்று பல்வேறு இஸ்லாமிய குழுக்களை கேத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சேவுமே உருவாக்கியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவே இவ்வாறான குழுக்களை அவர்கள் உருவாக்கியதாக தெரிவித்த மேர்வின் சில்வா, சிங்கள பௌத்த நாடான இலங்கையை மாற்றியமைக்க யாராவது முயற்சி செய்தால், இனப்படுகொலை செய்தாவது நாட்டை பாதுகாக்க தயங்க மாட்டேன் எனவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை