உலக செய்திகள்

எகிப்து மசூதியில் தொழுகையின் போது வெடிகுண்டு, துப்பாக்கி சூடு தாக்குதல், 54 பேர் உயிரிழப்பு

எகிப்து மசூதியில் தொழுகையின் போது வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 54 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு மீடியா தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

கெய்ரோ,

வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் 54 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் அந்நாட்டு மீடியா தகவல்கள் தெரிவிக்கிறது. மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

வடக்கு செனாயில் ஐ.எஸ். ஊடுருவல்காரர்களுடன் பாதுகாப்பு படை சண்டையிட்டு வருகிறது. இதுவரையில் சண்டையில் பயங்கரவாதிகள் 100 பாதுகாப்பு படை வீரர்களை கொன்று உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடமாக பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ச்சியாக சண்டையிட்டு வருகிறார்கள். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனரா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஆலோசிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை