உலக செய்திகள்

இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை

இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் என பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்தின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதி ஆடம் தாமஸ், கிளாடியா பட்டாடஸ். நாஜி ஆதரவாளர்களான இவர்கள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அடால்ப் ஹிட்லர் என பெயர் சூட்டினர்.

இதுபற்றிய தகவல் பரவலாக பரவியதை அடுத்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என கூறி ஆடம் தாமஸ் மற்றும் கிளாடியாவை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தாமசுக்கு 6 ஆண்டுகளும், கிளாடியாவுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்