உலக செய்திகள்

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலால் நில சரிவில் புதைந்த கிராமம்; பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

தெற்கு பிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலால் நில சரிவு ஏற்பட்டு பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

மணிலா,

பிலிப்பைன்சில் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. இதனால் கடும் வெள்ளம் மற்றும் நில சரிவு ஆகியவை ஏற்பட்டு பாதிப்பினை ஏற்படுத்தியது. இந்நிலசரிவில் ஒரு கிராமம் புதைந்து போனது.

இந்த சூறாவளி தாக்குதலில் துபோட் நகரில் 19 பேர் பலியானார்கள். இதேபோன்று அருகிலுள்ள நகரங்களில் சூறாவளி பாதிப்பினால் 4 பேரும், லானாவ் டெல் சர் மாகாணத்தில் 7 பேரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், நில சரிவில் கிராமம் புதைந்து போனதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி துபோட் நகர அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, சூறாவளியை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நில சரிவில் கிராமம் புதைந்து போனது பற்றி தகவல்களை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை