உலக செய்திகள்

அணு ஆயுத சோதனை விவகாரம்; டிரம்ப் கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம்

வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று டிரம்ப் கூறினார்.

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார். இதற்கிடையில் டிரம்ப் கூறும்போது, ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்தார்.இதுகுறித்து அவர்கள் பேச மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன, என்றார் டிரம்ப்.

இந்த நிலையில், டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. தற்போதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் நாடாக பாகிஸ்தான் இருக்காது. நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க மாட்டோம், என்றார்.

அதேபோல், அணு ஆயுத சோதனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது, என்று சீனா தெரிவித்துள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து